கொழுந்து பறித்த பெண் பாம்பு தீண்டி பலி! பசறையில் சோகம்!!

பசறை மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய கெரண்டிஎல்ல மடுல்சீமை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் தனது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவரை தேயிலை செடிக்குள் இருந்து பாம்பொன்று கடித்ததினால் குறித்த பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது மரண பரிசோதனையின்படி பாம்பின் விஷம் உடலில் பரவியமையே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles