ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மூவரும் ஒரே தடவையில் அல்லாமல், தனித்தனியாக வருவதற்கும், அதன்மூலம் ஊடக அவதானத்தை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, தலதா அத்துகோரள பாணியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
அதேவேளை , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு அணியில் உள்ள இரு எம்.பிக்கள் விரைவில் சஜித்துடன் சங்கமிக்கவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.










