“ நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களை நிவர்த்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறவிப் பயனை அடைந்துள்ளார்.” – என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையாமல் இருக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பி வருகிறார். பண்டாரநாயக்கவில் காலத்தில் ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோன்ற நிலைமை நாட்டில் மீண்டும் உருவாகியுள்ளது.
அதற்காக தேசிய வரவு செலவு திட்டமும், பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்களையும் பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளார். ‘உறுமய’ திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கினார். இலவசமாக அரிசி வழங்கினார்.
அரச ஊழியர்களுக்கு மேலும் 25 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கூறியுள்ளார். இவை எவையும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல. எனவே நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களை நிவர்த்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறவிப் பயனை அடைந்துள்ளார்.” – என்றார்.










