மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் அறுவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த ஐந்து பெண்கள் மற்றும் ஆணொருவருமே குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூன்று பேர் சிகிச்சை பெற்று வெளியேறினர். இரண்டு பெண்களும் ஒரு ஆணும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்