பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று தாக்கல் செய்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி சுப்பிரமணியம் காண்டீபன் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி அரசியல் கட்சியாக நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.
அதேநேரத்தில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையில் நான்கு மாவட்டங்களில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி போட்டியிடவுள்ளதாகவும் தேர்தலில் ஒலிபெருக்கி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.