இதொகாவின் தலையீட்டால் அதிகரிக்கப்பட்ட சம்பளம்  தொழிலாளர்களின் கைகளுக்கு கிட்டியது!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டையடுத்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக நிர்ணயிக்கப்பட்ட சம்பள உயர்வு நேற்று (10) கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தொழிலாளர்கள், இதொகாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகா அறிவித்திருந்தது.

இது தொடர்பில் கம்பனிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்வை பெற்றுக்கொடுப்பதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்பட்டது.

அதன்அடிப்படையில் ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக பெருந்தோட்டக் கம்பனிகள் சட்ட போராட்டத்தில் இறங்கின.

அந்த சவாலையும் இதொகா எதிர்கொண்டது. தந்திரோபாக நகர்வாக வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறப்பட்டு, கம்பனிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டன.

அதன்அடிப்படையில் அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகரிக்கப்பட்ட சம்பளமே நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது.

எஞ்சிய 350 ரூபாவை தொழிலாளர்களுக்கு, தொழில் சுமை அதிகரிக்கப்படாதவகையில் பெற்றுக் கொடுப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளில் இதொகா ஈடுபட்டுவந்தது.

எதிர்காலத்திலும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு அந்த 350 ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்ட பின்னர் நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா கிடைப்பது உறுதியாகும். அடிப்படை நாள் சம்பளம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை இதொகாவின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாக கருதப்படுகின்றது.

Related Articles

Latest Articles