நுவரெலியாவில் இதொகா வேட்புமனு தாக்கல்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் (11.10.2024) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதன் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான ஜீவன் தொண்டமான் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Related Articles

Latest Articles