நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுவதுபோல தமிழரசுக் கட்சியுடன் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது ‘ தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் எனவும், அரசுடன் இணைவதற்கு பெடரல் அரசமைப்பு மற்றும் ஜெனிவாவில் 30ஃ1 தீர்மானத்தை அமுலாக்கல் ஆகிய இரண்டு நிபந்தனைகளை அவர்கள் (தமிழரசுக் கட்சி) முன்வைத்துள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ வேலையில்லாததால் அவர் (கம்மன்பில) எதை எதையோ உளறி வருகின்றார். அவர் எமது கட்சியில் எவ்வித பதவியையும் வகிக்கவில்லை. அமைச்சர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அவர் அப்பட்டமான பொய்யை கூறுகின்றார். அப்படி எந்த திட்டமும் இல்லை.”- என்றார்.










