ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமைக்கு இணையாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் பொதுமக்களால் நுகர்வோர் விவகார அதிகார சபையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன் மற்றும் மூலப்பொருட்களின் விலை குறைப்பின் பலன் என்பனவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றார்களா? என்பதை ஆராய்வதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு இணையாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினரையும் ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத்தினரையும் அழைத்து விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.