தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

“இணைந்த வடக்கு – கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அதன் தனித்துவமான இறைமை – சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தொடர்ந்து போராடுவோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று வியாழக்கிழமை மாலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டார்.

இதன்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்னர்.

26 பக்கங்கள் கொண்ட அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இன்று இலங்கைத் தீவை மையமாகக் கொண்ட பூகோள ஆதிக்கப் போட்டியொன்று இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள ஆதிக்கத்தில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது, தமிழர்களுக்கான நிகரற்ற பேரம் பேசும் சக்தியாகும். இதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது எமது திடமான நிலைப்பாடு ஆகும்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும்.

13ஆம் திருத்தச் சட்டத்தை இனப் பிரச்சினை தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கடந்த 2017 செப்ரெம்பர் 21இல் வெளியிடப்படட புதிய ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசமைப்புக்கான இடைக்கால வரைபை முற்றாக நிராகரிக்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் பிரகாரம், இணைந்த வடக்கு – கிழக்கை தாயகமாகக் கொண்டு தமிழ் மக்களை, தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரித்து அதன் தனித்துவமான இறைமையையும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் தாம் சுயநிர்ணய உரிமையைக் கோர உரித்துடையவர்கள் என்ற கோரிக்கைகளை முன்வைப்பின், நாம் அதனை ஏற்றுக்கொள்வோம். ஆனால், சுயநிர்ணய உரிமை அரசியலை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக அவர்களுடன் கைகோத்து ஒன்றாகப் பயணிப்பதற்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம்.

மேலும், இலங்கை அரசமைப்பில், அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தனிமனிதனுடைய பேச்சுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகின்ற வகையில் இணைக்கப்பட்டுள்ள 1983 ஆம் ஆண்டின் 6ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் மக்கள் மீது இனவழிப்பு, மானுட குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் போர் குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. இந்தக் குற்றங்கள் தொடர்பாக காத்திரமான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் மூலமான விசாரணையையே வலியுறுத்துகின்றோம்.

எனினும், தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவுடன் உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இனப்படுகொலையாளிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளனர். இனியும் பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்காமல் உடனடியாக சர்வதேச குற்றவியில் நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அதற்கான அழுத்தங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

தவிர, வடக்கு – கிழக்கு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அதனை மீளக் கட்டியெழுப்புதல் (பொருளாதாரம், மனிதவளம்) நிலையான அபிவிருத்தி, இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை கையாளும்முகமாக, வடக்கு – கிழக்கில் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்கான நிதி நேரடியாகக் கிடைப்பதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம், சுதேச கைத்தொழில், தமிழர் மொழி – கலை – பண்பாட்டு அபிவிருத்தி, மீன்பிடித்துறை அபிவிருத்தி, கல்வி என்பன குறித்தும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றம், அரச – தனியார் காணிகள் விடுவிப்பு, திட்டமிட்ட சிங்கள – பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு என்பன குறித்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அக்கறை செலுத்தியுள்ளது.

தவிர, இன விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்துதல், தமிழகம், புலம்பெயர் மக்களுடனான உறவை மேம்படுத்தல், தமிழருக்கான வெளியுறவுக் கொள்கை என்பவை குறித்தும் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம், உடனடி வாழ்வாதார பிரச்னை, அபிவிருத்தி போன்ற அனைத்து விவகாரங்களையும் கையாள தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தப் பேரவையே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அதியுயர் அதிகார சபையாக செயற்படும் விதமாக மாற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Video thumbnail
தீபாவளிக்கு எங்கடா DRESS வாங்கனும்னு யோசிச்சிக்கிட்டு இருக்கீங்களா? நம்ம ZUZIக்கு வாங்க....
01:42
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles