இம்மாதம் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அனைத்து மதுபானசாலை உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்திணைக்களம் தெரிவித்தது.
14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாலும் 15ஆம் திகதி போயா தினமாக இருப்பதாலும் இந்த இரண்டு தினங்களிலும் மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள இத்தினங்களில் இந்த விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக செயற்படும் மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்தது.
