10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கை விளக்கஉரைமீது நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன்படி டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்படி விவாதத்துக்கு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் கொள்கைப் பிரடகனம் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு, மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளது. டிசம்பர் 4ஆம் திகதியும் குறித்த பிரேரணை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
டிசம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புக் குறித்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய டிசம்பர் 05ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. இது பற்றிய விவாதத்தை 06ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையும் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.