தாய் வீடு திரும்புமாறு சஜித்துக்கு நவீன் அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கட்சி பிளவுபட்டிருந்தால் தோல்விகள்தான் குவியும். நாம் இணைந்தால்தான் வெற்றியை நோக்கி நகரமுடியும். எனவே, எதிர்காலத்தில் நாம் அனைவரும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியாக பயணிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய எனது தந்தை காமினி திஸாநாயக்க, 1994 இல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பினார். பிரதித் தலைவராகி, ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். அதேபோன்றதொரு நடவடிக்கையை சஜித் முன்னெடுக்க வேண்டும்.

அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரவேண்டும். கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கட்சி தலைவர் ரணிலுடன் கலந்துரையாடி முன்னோக்கி செல்ல வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டாம் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும்.”- என்றார்.

Related Articles

Latest Articles