கோலாகலமாக நடந்து முடிந்த நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம்!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலுபாலாவின் திருமணம் ஹைதராபாதில் கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று இரவு 8.00 மணியளவில் திருமணம் நடைபெற்று முடிந்ததும், நள்ளிரவு 1 மணிவரை திருமண சடங்குகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாக சைதன்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான நாகர்ஜுனா, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், புதுமண தம்பதியின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக, இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles