பெருந்தோட்ட மக்களுக்கு ரூ. 2000 சம்பளம் வேண்டும்!

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக செயற்பட்டார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்.

பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் தரப்பினரும், தொழிற்சங்கங்களும் இந்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்தின் 100 நாட்கள் செயற்பாடுகள் பற்றியும், ஏழ்மை, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன. இலங்கை தீவுக்குள் பெருந்தோட்டம் என்றதொரு தீவு உள்ளதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.

பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளதுடன், காணி, வீட்டு உரிமையின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

உலக உணவு தாபனம், செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் பெருந்தோட்ட மக்கள் இன்றும் பின்னடைந்த சமூகமாகவே வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் குறித்து கரிசணை கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் எம்முடன் இணக்கமாக செயற்பட்டார். கடந்த பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து சபை ஒத்திவைப்பு பிரேரணையை நான் முன்வைத்த போது அதனை தோழர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார்.ஆகவே மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.

தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். கடந்த அரசாங்கம் 900 ரூபா சம்பள அதிகரிப்பையும், இடைக்கால அரசாங்கம் 1700 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. இருப்பினும் 1300 ரூபாவே கிடைக்கப் பெற்றது. ஆகவே 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000 ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறேன்.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவர் இந்த 2000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல் பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த 2000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles