அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம்!

அரசியல் தேவைகளுக்காக பொய்யான முறையில் கைது செய்தால், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்.” – என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 2015 ஆம் ஆண்டும் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டார். 42 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இன்னும் வழக்கு தொடுக்கப்படவில்லை. விமல் வீரவன்சவுக்கும் இப்படிதான் நடந்தது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயலாளராக அன்று இருந்த ஆனந்த விஜேபாலதான் தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். எனவே, அவர்தான் கைதுகளுக்கு தலைமை வழங்குகின்றார். 2015 இல் நடந்ததுதான் தற்போதும் நடக்கின்றது.

பொய்யான முறையில் கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதனை செய்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்பதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு கூறி வைக்க விரும்புகின்றோம்.

யோசிதவின் கைது தொடர்பில் முன்கூட்டியே தெரியும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறி இருந்தார். எனவே, இந்த கைது அரசியல் தேவையின் நிமித்தம் நடந்துள்ளது என்பது உறுதியாகின்றது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles