ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால்கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
” இடதுசாரி மூகமூடியை அணிந்துக்கொண்டு லிபரல் வழியில் அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்காகூட அழைப்பு விடுத்துள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். தற்போது அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.” – எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.