‘தண்ணீர் வைத்தியம்’ – அர்ச்சுனாவுக்கு மனோ நெத்தியடி!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு இது…..

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பெயரை விளிக்காமல், அவரை இலக்குவைத்தே இப்பதிவு இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் வாழும், தமிழர்கள் அனைவரும், பிரதேச, வரலாற்று, காரணங்களுக்கு அப்பால் ஐக்கிய பட வேண்டும் என எப்போதும் விரும்பி, நாம் பாடுபடுகிறோம்.

காலம் அதைத்தான் வலியுறுத்துகிறது. காலன் சொன்னதும் அதுதான். நானும் அதைதான பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். இன்றைய இளந்தமிழர் தலைமுறையும் அதைதான் விரும்புகிறது.

சமீபத்தில், மாவையின் மாவிட்டபுர இறுதி சடங்கிலும் இது பற்றி நான் பேசினேன். எனது அன்றய உரையை ரீ-வைன்ட் செய்து கேட்டால் விளங்கும்.

சில நபர்கள், தன்நிலை மறந்த சூட்டில் உளரும் போது, திருப்பி, திருப்பி, சொல்லியும், கேட்காமல் தொடர்ந்து “சமூக தூஷணம்” பேசும் போது, அவர்கள் மீது, தண்ணீரை தெளித்து, குளிர வைத்து, சூட்டை குறைப்பது உலகில் அங்கீகரிக்க பட்ட தண்ணீர் பாஷையாகும்.

ஏனென்றால், சில நேரங்களில் சில மனிதர்களுக்கு, வாயால் பேசும் மொழி புரிவதில்லை. தர்க்கம், நீதி, நியாயம் என்று எதை எடுத்து சொன்னாலும் கேட்கும் நிலையில் அவர்கள் இருப்பதில்லை.

இன்னமும் பல பாஷைகள் உள. ஆனால் இருப்பதில் நாகரீகமான பாஷை, இந்த தண்ணீர் பாஷைத்தான்.

ஆகவே, #சம்பவம் நடக்க கூடாது என விரும்புகிறேன். இல்லை, நான் திருந்தவே மாட்டேன் என அடம் பிடித்தால், பகிரங்கமாகவே நடக்கும்..!

Related Articles

Latest Articles