கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கவத்த பகுதியில் வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தைப்புலியொன்று இன்று (12.11.2020) முற்பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றின் புன்புறத்தில் உள்ள கிணற்றில் சுமார் 5 அடி நீளமான சிறுத்தை புலியொன்று விழுந்து கிடப்பதை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பில் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிணற்றுக்குள் பொறியொன்றை போட்டு, பாதுகாப்பான முறையில் சிறுத்தைப்புலியை மீட்டு , வாகனமொன்றில் எடுத்துச்சென்றனர்.
சிகிச்சைகளுக்கு பின்னர் சிறுத்தைப்புலி விடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.











