அன்று ரூ. 1700 போதாதென்ற ஜே.வி.பி, இன்று அதே தொகையில் நிற்பது ஏன்?

எதிர்க்கட்சியில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளம் போதாதெனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இப்போது அதே தொகையில் நிற்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலைமீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஆயிரத்து 700 ரூபா வழங்கினால் எஞ்சிய 300 ரூபாவுக்கு என்ன நடக்கும் என அன்று கேட்ட தேசிய மக்கள் சக்தியினர், இன்று என்ன கூறப்போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles