பசறையிலிருந்து பதுளைக்கு மாட்டிறைச்சி கடத்திய இருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று காலை 10.00 மணியளவில் மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் இரு சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை நகர் பகுதியை சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பசறையில் இருந்து பதுளைக்கு முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன ஏகநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முச்சக்கரவண்டியைத் தேடி பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யுடன் பொலிஸ் குழுவினரும் பதுளை நோக்கி பயணித்த போது, ​​சந்தேகத்துக்கு இடமான முச்சக்கரவண்டியை பதுளை பசறை வீதி 10 ம் கட்டை பகுதியில் குறித்த முச்சக்கர வண்டியை
நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 89 கிலோ மாட்டு இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், திருடப்பட்ட மாடுகள் நீண்டகாலமாக விற்பனைக்காக அறுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான வழக்குகள் பிபில மற்றும் மொனராகலை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles