மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார்முற்றுகையிட்டு பெண் முகாமையாளர்உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துஒப்படைத்துள்ளனர் என்று பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப் பிரதேசத்தில் நீண்ட காலமாகக் ஹோட்டல் என்ற பேர்வையில் விபச்சார விடுதி நடத்தி வருவது தொடர்பாகமாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுபொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின்ஆலோசனைக்கமைய மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிஸார் குறித்த விபச்சார விடுதி தொடர்பாகநீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றைசமர்பித்து அனுமதியை பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் நேற்று மாலை முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.