லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார்.

இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், ஆங்​கிலம் உட்பட பல்​வேறு மொழிகளில் 1,000-க்​கும் மேற்​பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்​ளார்.

சிம்​பொனி இசை அமைக்க வேண்​டும் என்பது அவரது நீண்​ட​கால கனவாக இருந்​தது. ஒரே நேரத்​தில் பல்​வேறு இசைக்​கருவி​களை ஒன்​றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசை​தான் சிம்​பொனி. அதன் தொடக்​க​மாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்​பத்தை அவர் உரு​வாக்​கி​னார்.

இந்நிலையில், ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறி​வித்​தார்.

இந்நிலையில், கடந்த 6-ம் திகதி லண்​டன் சென்ற இளை​ய​ராஜா, இந்​திய நேரப்படி நேற்று அதி​காலை 12.30 மணிக்கு அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார்.
உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார்.

அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில்ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்​வை​யாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழுதி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை இளை​ய​ராஜா படைத்​துள்​ளார்.

இசை ஜாம்​ப​வான்​கள் மொஸார்ட், பீத்​தோவன், சாய்​கோவ்​ஸ்கி ஆகிய சிம்​பொனி இசைக் கலைஞர்​கள் வரிசை​யில் இளை​ய​ராஜா​வும் இணைந்​துள்​ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles