அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ள நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயர மஹிந்த தொடம்ப கமகே, மீண்டும் அரசியலுக்கு வந்து நுவரெலியா மாநரசபைக்கு போட்டியிட வேண்டும் எனக் கோரி இன்று ஆதரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் வாக்காளர்களாலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மஹிந்த தொடம்ப கமகேவுக்கு உரிய நுவரெலியா பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்னாள் திரண்ட சர்வமத தலைவர்கள், ஆதரவாளர்கள், அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என கோரினார்கள்.
மஹிந்த தொடம்ப கமகே நுவரெலியா மேயராக செயல்பட்டபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் வந்த முன்னாள் மேயர் தொடம்ப கமகே, தனக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும், எனினும், வாக்காளர்களின் கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
எம். கோவிந்தன்