பிரிட்டனில் பிழை கண்டுபிடிக்க முன் புதிய அரசியலைப்பை இயற்றவும்! மனோ வலியுறுத்து

பிரிட்டனில் பிழை கண்டுபிடிக்க முன், புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

‘ பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்புகிறது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

டேவிட் லெம்மி, தான் இதை தம் தேர்தல் பிரசாரத்தின் போது தந்த வாக்குறுதிகளுக்கு ஏற்பவே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.” எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது அரசாங்கம் உறுதியளித்த, அரசியலமைப்பு செயற்பாடு, இன்று எங்கே? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலம் கடக்கும் முன், நீங்கள் உறுதி அளித்தபடி, நல்லாட்சியில் 2018 ஆண்டளவில் இடை நிறுத்த பட்ட, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை, நின்ற இடத்தில் இருந்து முன்னெடுங்கள். அதை தானே நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பிரசாரத்தில் சொல்லி வாக்கு வாங்கினீர்கள்? அதை செய்யாமல், இன்று நடக்காத உங்கள் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை, பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி தடைகளை அறிவித்து குழப்புவதாக கூறுவது வேடிக்கையாகும் எனவும் மனோ விசனம் வெளியிட்டுள்ளார்.

ஆகவே காலதாமதம் ஏற்பட முன், உடனடியாக புதிய அரசியலமைப்பு பணியினை ஆரம்பித்து தேசிய நல்லிணக்க இலங்கை அடையுங்கள். அதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு நீங்கள் தர கூடிய சரியான பதிலாக இருக்க முடியும் என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles