16 அடி கற்பக விநாயகர் சிலையுடன் இலங்கையில் அமையவுள்ள முதல் விநாயகர் ஆலயம்!

புஸல்லாவையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்துக்குரிய, 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக இன்று ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

16 அடி உயரம்கொண்ட கற்பக விநாயகம் சிலையுடன் அமையும் முதல் ஆலயம் இதுவாகும் என கூறப்படுகின்றது.

குறித்த சிலை தமிழகம் பிள்ளையார்பட்டி வளாகத்தில் செதுக்கப்பட்டதாகும். பிள்ளையார்பட்டி ஆலய குகை வரதர் பிள்ளையார் சிலைக்கு நிகராகவே இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், வழிபாட்டுக்கான பிள்ளையாருக்கான சன்னிதானம் எழுப்பப்பட்டு, அதற்கான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

Related Articles

Latest Articles