பிள்ளையானுக்காக கம்மன்பில களமிறங்கியதன் பின்னணி என்ன?

‘ பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில செயல்படுவதுகூட ஒரு வகையான அரசியல் சூழ்ச்சியாகும். எனினும், எமது ஆட்சியின்கீழ் கடந்த கால சம்பவங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழு நடவடிக்கை எடுத்துவருகின்றது. கடந்த காலங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கோப்புகள் பற்றி விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

அதேபோல குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை துரிதப்படுத்திவருகின்றது. சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்செய்யப்பட்டுவருகின்றன.

இவ்வாறு சட்டத்தின் பக்கம் செய்ய வேண்டிய பணிகள் துறைசார் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறித்த நிறுவனங்களுக்குரிய வளங்களை மட்டுமே அரசாங்கம் வழங்கிவருகின்றது.

அதேவேளை, பிள்ளையானின் சட்டத்தரணியாக தற்போது கம்மன்பில செயற்படுகின்றார். கம்மன்பில வழக்குகளில் வாதாடுவதை எமது நாட்டு மக்கள் கண்டிருக்கமாட்டார்கள். எனினும், தனது சட்டத்தரணியாக கம்மன்பிலவை பிள்ளையானும் ஏற்றுள்ளார். இது சூழ்ச்சியாகும். கடந்தகால சம்பவங்களின் முடிச்சுகளைதான் நாம் தற்போது அவிழ்த்துவருகின்றோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles