நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசரே கிளரண்டன் பகுதியில் வீதியில குடைசாய்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வி.தீபன்ராஜ்