இறம்பொடை விபத்து: 19 பேர் காயம்!

இறம்பொடை பகுதியில் இன்று வேனொன்று விபத்துக்குள்ளாகியதில் சிறார்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 19 பேர் காயமடைந்து கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் திரும்பி செல்லும் வழியிலேயே குறித்த வேன், வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்தில் வேன் முற்றாக சேதமடைந்துள்ளது.

 

Related Articles

Latest Articles