அர்ச்சுனாவுக்காக சபையில் குரல் எழுப்பிய நாமல்!

டயஸ்போராக்களுக்கு ஒன்றை கூறிவிட்டு வேறொன்றையே அரசாங்கம் செய்கின்றது. அதனை மூடிமறைப்பதற்காகவே வடக்கு எம்.பிக்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘உப்பு தொடர்பில் அர்ச்சுனா எம்.பியுடன் ஆளுங்கட்சி உறுப்பினர் சர்ச்சையில் ஈடுபட்டார். உப்பு விநியோக முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே அவரின் (அர்ச்சுனாவின்) கருத்தாக இருந்தது. இதைகூட புரிந்துகொள்ள முடியாமல் அதற்கும் அமைச்சர் இனவாதம் பூச முற்படுகின்றார்.

அரசாங்கம் டயஸ்போராக்களுக்கு ஒரு உறுதிமொழியை வழங்கியது. ஆனால் வேறொரு விடயமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நேரம் வரும்போது அவற்றை நாம் வெளிப்படுத்துவோம். அர்ச்சுனாவும் வெளிப்படுத்துவார் என நம்புகின்றோம்.

டயஸ்போராக்களுக்கு கூறியது ஒன்று, ஆட்சிக்கு வந்ததும் செய்வது வேறொன்று, இதனை மூடி மறைத்துக்கொள்வதற்காக வடக்கில் இருந்து வந்த எம்.பிக்களை விமர்சிக்கின்றனர்.

முதலீட்டாளர்களை கொண்டுவருவோம் எனக் கூறுகின்றனர். ஆனால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. அண்மையில்கூட ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது. பலர் வேலை இழந்துள்ளனர்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Related Articles

Latest Articles