புடவை வர்த்தகம் என்ற போர்வையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ள இளைஞர் ஒருவரை, ஏழு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வியாங்கொடை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைவல பிரதேசத்தில் வைத்து மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்தப் பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி போதைப் பொருளுடன் போதைப் பொருளை போக்குவரத்து செய்ய பயன்படுத்தப்பட்டுள்ள வேன் மற்றும் ஆறு தராசுகள், 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள மேற்படி ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ஏழு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நைவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயது நபர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.