யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தேர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்;ராட்சி சபைத் தேர்தலில் ஏதேனும் தரப்பு தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்ற சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளிற்கான முதல்வர் மற்றும் தவிசாளர் தேர்வு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறும்.
இதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள 34 சபைகளில் 3 சபைகளில் தமிழ் அரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றியீட்டியதன் அடிப்படையில் சுயமாக நிர்வாகத்தை அமைத்துக்கொண்டது.
இதேபோன்று எஞ்சிய 31 சபைகளும் உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலை மையில் இடம்பெறுவதற்கான திகதி நேர அட்டவனை என்பன வர்த்தமானி அறிவித்தலிற்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.