ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரில் சைட் வீதியில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ளது என மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பட்டையடுத்து விரைந்து செயற்பட்ட ஹட்டன் பொலிஸார், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கினனர்.
இந் நிலையில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இரவு 11.30 மணியளவில் நோர்வூட் வென்ஜர் கீழ் பிரிவிலுள்ள குடியிருப்பிருப்பு ஒன்றினை சோதனையிட்டபோது – களவாடப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள் மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் இருவர் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் தலைமைறைவாகியுள்ள நிலையில் அவர் தேடும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அட்டன் மற்றும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சதீஸ்