நிர்வாகம் கைவிரிப்பு! காடாகமாறிவரும் தேயிலை தோட்டம்!!

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட புளூம்பீல்ட் தோட்டத்தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை வருடகாலமாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. எனினும், அவர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் இன்னும் தீர்வை வழங்கவில்லை. இதனால் தோட்டங்கள் காடாகிவருவதுடன், மக்களும் வருமானமின்றி பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

தனியாருக்கு உரித்தான இத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்வற்றை முறையாக செலுத்தப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். எனினும், இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

இது தொடர்பாக ஊர் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

” வேலை நிறுத்தத்துக்கு முன்னைய காலகளில் வேலை செய்ய காலத்தை விட குறைவான தொகையே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் வழங்கப்படுகின்றனது. ஒருசிலர் அந்த பணத்தை கண்ணில் பார்க்கும் முன்பே இறந்துவிட்டனர். எனவே உரிய தொகையை முழுமையாக வழங்க கோரியே இவ்வாறு பணிபகீஸ்கரிப்பை முன்னெடுத்தோம். ஆனால் முடிவு இது வரையிலும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக முதராளிமார்களிடம் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இதுவரையிலும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதனால் தேயிலை தோட்டங்கள் காடாகிகொண்டு வருகின்றது.தொழிலாளர்களை தொழிலை தேடி குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளி ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர்.

கொரோனா காலப்பகுதி என்பதால் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.தோட்டங்கள் காடாகி வருவதால் பாம்புகளும், பன்றிகளும்,சிறுத்தைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் இதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்குள் மறைந்துவிட்டார் தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானூடாகவே இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும். எனவே விரைவில் முழுமையான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கேட்கின்றோம்.” – என்றனர்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles