அகில இலங்கை கரபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து, நடுவர் குழாமுக்கு கண்டி மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை புசல்லாவையை சேர்ந்த செல்லழுத்து செல்வச்சந்திரன் பெற்றுள்ளார்.
புசல்லாவை இந்து தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் புசல்லாவை கலுகல்ல கோபி விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.
புசல்லாவை பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பெற்ற இவருக்கு, மேற்படி பதவி நிலை கிடைக்கப்பெற்றமையானது புசல்லாவை மண்ணுக்கு கிடைத்த பெருமையாகக் கருதப்படுகின்றது.