குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.
சாமிமலை, ஓல்ட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் டிக்கோயா கிளங்கன், வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.