இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழகம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சிவகங்கை தொகுதியின் மானகிரியில் இடம்பெற்ற இச்சந்தந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாக கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான் , இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் குறித்தும், மேலும் பல முக்கிய விடயங்கள் சார்ந்து இருவரும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.