” போராட்டங்கள் மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. சட்டம் தனது கடமையை செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல.” – என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. அந்த ஜனநாயக உரிமையை மதிக்கின்றோம். அதேபோல நாட்டில் சட்டமும் தனக்குரிய கடமையை செய்யும். போராட்டம் மூலம் அதனை தடுக்க முடியாது.
எதிரணிகளின் ஒன்றிணைவு ரணிலை பாதுகாக்கும் முன்னணி அல்ல , அது அவர்களுக்கும் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சியாகும்.
எவரையும் பழிவாங்கும் தேவைப்பாடு அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் இடம்பெறும்.
கடந்த காலங்களிலேயே பிரதமர் நீதியரசர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்வாங்கப்பட்டார். சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார்.” – என்றார் அமைச்சர்.