யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 10 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது 10 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 மனித என்புத் தொகுதிகள் நெரூர் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 174 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று இரண்டு என்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் காப்பு ஒன்று உடைந்த நிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் சான்றுப் பொருளாக நீதிமன்றக் கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.