ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: 14 ஆம் திகதி இந்தியா, பாகிஸ்தான் மோதல்!

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் திகதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் திகதி  வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் இலங்​கை, வங்​கதேசம், ஆப்​கானிஸ்​தான், ஹாங் காங் ஆகிய அணி​கள் உள்​ளன.

லீக் சுற்​றில் ஒவ்​வொரு அணி​யும் தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறும்.

இந்த சுற்​றில் 4 அணி​களும் தங்​களுக்​குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும். சூப்​பர் 4 சுற்று 20-ம் திகதி முதல் 26-ம் திகதி வரை நடை​பெறுகிறது.

சாம்​பியன் பட்​டம் வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்டி 28-ம் திகதி நடை​பெறுகிறது. தொடரின் அனைத்து ஆட்​டங்​களும் துபாய், அபு​தாபி​யில் நடத்​தப்​படு​கிறது.

தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள ஆப்​கானிஸ்​தான் – ஹாங் காங் அணி​கள் மோதுகின்​றன. இந்த ஆட்​டம் இலங்கை நேரப்​படி இரவு 8 அணிக்கு அபு​தாபி​யில் நடை​பெறுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நாளை  ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் துபா​யில் நடை​பெறுகிறது. மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்ள இந்​தியா – பாகிஸ்​தான் ஆட்​டம் வரும் 14-ம் திகதி நடை​பெறுகிறது.

டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. இதனால் உலகக் கோப்பை தொடருக்​கான அணியை கட்​டமைக்​கும் வகை​யில் ஆசிய கோப்பை டி 20 தொடரை இந்​தி​யா, பாகிஸ்​தான், இலங்​கை, ஆப்​கானிஸ்​தான் உள்​ளிட்ட அணி​கள் பயன்​படுத்​திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும்.

ஆசிய கோப்பை தொடரில் இந்​திய அணி 8 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளது. இதில் 7 தொடர்​கள் 50 ஓவர்​கள் வடி​வில் நடத்​தப்​பட்​ட​வை. அதேவேளை​யில் 2016-ம் ஆண்டு இந்​தியா வென்ற தொடர் டி 20 வடி​வில் நடத்​தப்​பட்​டிருந்​தது. கடைசி​யாக 2023-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்​தியா கோப்​பையை வென்​றிருந்​தது.

டி 20 உலகக் கோப்​பைக்கு முன்​ன​தாக இந்​திய அணி ஆசிய கோ .

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles