ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் – 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூப்பர் சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இந்திய அணியிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது.
எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றியென்பது இரு அணிகளுக்குமே மிக முக்கியம்.
இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறும்.










