இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கிற்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் சந்தித்து பேச்சு நடத்தியபோhதே மேற்படி அழைப்பை விடுத்தார்.
இதன்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அங்கு கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய சீனா நிறுவப்பட்ட பின்னர், நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட உறுதிப்பாடு மற்றும் பணியக விவகாரங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதன் மூலம், நிலையான நிர்வாகத்தைப் பேணுதல், முற்போக்கான எதிர் சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்புக் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி, ஒழுக்கத்தைப் பேணுவதன் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
சமூக நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் வலியுறுத்தியுள்ளார்.
ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டை செயற்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
[09:50, 10/25/2025] Sanath: வடக்கு முதல்வர் விவகாரம்: ஸ்ரீதரன், சுமந்திரனை இணைக்க தீவிர முயற்சி!
அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பெரும் தூண்களான ஸ்ரீதரனையும், சுமந்திரனையும் சமரசப்படுத்துவதற்குரிய முயற்சியில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி வெற்றிநடை போட வேண்டுமெனில் இரு தரப்பினரும் அரசியல் முரண்பாடுகளை களைந்து, ஓரணியில் திரள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு முதல்வர் வேட்பாளராக சிறிதரனை களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சி பரிசீலித்துவருகின்றது.
இதற்காக எம்.பி. பதவியை அவர் துறந்த பின்னர் யாழ்.மாவட்டத்தில் அடுத்த இடத்தில் இருக்கும் எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றம் செல்வார்.
இத்திட்டத்துக்கு சுமந்திரன் தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளபோதிலும், ஸ்ரீதரன் தரப்பு நிபந்தனையொன்றை விதித்துள்ளது என அறியமுடிகின்றது.
இத்திட்டம் அமுலாக வேண்டுமெனில் தமிழரசுக் கட்சியின் தலைவராக தன்னை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும், தலைமைப்பதவி தொடர்பில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீளப்பெறப்படவேண்டும் எனவும் சுமந்திரன் தரப்புக்கு, ஸ்ரீதரன் தரப்பு நிபந்தனை முன்வைத்துள்ளது.
அதேவேளை, சுமந்திரன் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினால்கூட ஸ்ரீதரனின் பகிரங்க ஆதரவு இல்லாமல் அவரால் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியமில்லை எனவும் கூறப்படுகின்றது. எனவே, முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதாக இருந்தால்கூட ஸ்ரீதரன் தரப்பின் நிபந்தனையை, சுமந்திரன் அணி ஏற்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி முடிவொன்றை எடுக்க வைப்பதற்குரிய முயற்சியில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.










