கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட நபர், புல் அறுப்பதற்கு சென்றவேளை குளவி கொட்டுக்கிலக்காகி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார். இத்துயர் சம்பவம் இன்று நண்பகல் பொகவந்தலாவை , எல்டப்ஸ் பகுதியில் உள்ள 06 ம் இலக்க தேயிலை மலையில் இடம்பெற்றுள்ளது.
கால்நடைக்கு புல் அறுப்பதற்கான தனது மனைவியுடன் சென்றுள்ளார். இதன்போது திடீரென களைந்து வந்த குளவிகள் சரமாரியாக கொட்டியுள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த குடும்பஸ்தர், பொகவந்தலா வைத்தியசாலைக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
69 வயதுடைய கருப்பனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலா பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










