அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுமாம்: கூறுகிறார் சரத் வீரசேகர!

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்;. இது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் அடுத்த தேர்தலின்போது நாட்டு மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை கவிழ்ப்பார்கள்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே பேரணியின் பிரதான நோக்கம். போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், போதை ஒழிப்பு என்ற போர்வையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மறந்து செயல்படுவது ஏற்புடையது அல்ல” எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles