இற்றைக்கு 77 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில்தான் இலங்கையில் குடியிருப்பு பறிப்பு சட்டம் அமுலுக்கு வந்தது. இதன்மூலம் லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் குடியுரிமை இழந்து நாடற்றவர்களாக்கப்பட்டனர். 1949 ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் பறிபோனது.
வரலாற்று துரோகம் வஞ்சிப்பு அரங்கேறி 7 சதாப்தங்கள் கடந்திருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், பொறுப்புகூறல் இடம்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
3 தசாப்தகால புறக்கணிப்புக்கு மத்தியில் மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் 2002 காலப்பகுதியிலேயே அப்பிரச்சினை முழுமையாக தீர்ந்தது.
குடியுரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு இன்னும் அடிப்படை உரிமைகள்கூட முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். காணி உரிமை அற்றவர்களாகவே இன்னும் வாழ்கின்றனர்.
மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம் தற்போது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையை வழங்குவதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. எனவே, ஒரு நாட்டில் பிரஜை ஒருவருக்குரிய அத்தனை உரிமைகளையும் பெறுவதற்குரிய அழுத்த குழவாக செயற்படுவோம்.
ஆர்.சனத்
