பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது படக்குழு. ‘பெத்தி’ படத்தினை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸ் நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரிக்கிறது.
’சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, இப்படத்திலும் பாலகிருஷ்ணா – நயன்தாரா ஜோடி இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கமர்ஷியல் கதைகளை இயக்கி வெற்றி கண்டவரான கோபிசந்த் மாலினேனி இப்படத்தின் மூலம் வரலாற்று பின்னணிக் கொண்ட கதையினை இயக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
