நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின் போது, அனர்த்தத்தின் தாக்கத்தையும், மக்களின் மனநிலையையும் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தின.

பாதுகாப்பு மையத்தில் இருந்த ஒரு தாய், தன் குழந்தையை அணைத்தபடி பகிர்ந்த கவலையும், சிறுவர்கள் கண்களில் தெரிந்த பயமும், நிலைமையின் ஆழமான பாதிப்பை வெளிப்படுத்தின.

“நாங்கள் மீண்டும் எப்போது வீட்டிற்குத் திரும்ப முடியும்?” என்ற ஒரு எளிய, ஆனால் வலிமையான கேள்வி, அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்த ஒரு கேள்வியிலேயே மக்கள் எதிர்கொள்ளும் துயரமும் அச்சமும் ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது.

அமைச்சர் சந்திரசேகர், மக்களின் இந்த வேதனையை உடனடி நடவடிக்கைகள் மூலம் குறைப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கச் செய்வதற்காக மாவட்டச் செயலாளர், கிராமஅதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூடி ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், உணவு, மருந்து, உலர் உணவு, உடைகள் போன்ற அவசியமான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சேதமடைந்த வீடுகள், ஆபத்தான மலைச்சரிவுகள், தாழ்வான நிலப்பகுதிகள் போன்றவை பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய நிலை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளவியல் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு ஆகியவை கூடுதல் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.

“ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்,” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

நுவரெலியாவில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள நிலையிலும், அவர்கள் மீண்டும் நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் பொறுப்புடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles