புசல்லாவை நகரில் சில வர்த்த நிலையங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் அங்கிருந்தவர்கள் இன்று அகற்றப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்த நிலையங்கள் அமைந்துள்ள பகுதிக்குள் உள்நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை நகரில் பழைய பஸ் தரிப்பிடத்துக்கு சற்று அருகாமையிலேயே குறித்த வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன.வர்த்தக நிலையங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது, தாழியங்கியதுபோலவும் காட்சியளிக்கின்றன.
“அப்பகுதியில் என்ன நடந்துள்ளது என்பது தெரியவில்லை, தண்ணீர் வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, உரிய ஆய்வின் பின்னரே என்னவென்பது தெரியவரும்;.” என்று புசல்லாவை நகர வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
உரிய ஆய்வுகளின் பின்னரே மேற்படி வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










