தொடரை வெல்லும் முனைப்போடு இந்தியா இன்று களத்தில்!

இந்​தியா- நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி ராஜ்கோட்​டில் உள்ள நிரஞ்​சன் ஷா மைதானத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் பட்​சத்​தில் இந்​திய அணி தொடரை கைப்​பற்​றும்.

இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 301 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 6 பந்​துகளை மீதம் வைத்து வெற்​றியை வசப்படுத்தி​யிருந்​தது. இதனால் தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடை​பெறுகிறது.

முதல் போட்​டி​யில் விராட் கோஹ்லி 93 ரன்​களை​யும், கேப்​டன் ஷுப்மன் கில் 56, ஸ்ரேயஸ் ஐயர் 49, கே.எல்​.​ராகுல் 29, ஹர்​ஷித் ராணா 29 ரன்​கள் சேர்த்து அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்​தர் விலகி உள்​ளார். அவருக்கு மாற்​றாக ஆயுஷ் பதோனி அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

எனினும் அவருக்கு விளை​யாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்​பது சந்​தேகம் ​தான். அநேக​மாக வாஷிங்​டன் சுந்​தர் இடத்​தில் நிதிஷ் குமார் களமிறங்​கக்​கூடும். முதல் போட்​டி​யில் குறைந்த ரன்​களில் ஆட்​ட​மிழந்த ரோஹித் சர்மா பெரிய அளவி​லான இன்​னிங்ஸை விளை​யாடு​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

நியூஸிலாந்து அணி இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடு​தல் கவனத்​துடன் செயல்பட முயற்​சிக்​கக்​கூடும்.

Related Articles

Latest Articles