” முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.
அவர் கால்டன் பாலர் பாடசாலையை நடத்திவருபவர். எனவே, சட்டத்தை மதித்து முன்மாதிரியாக திகழ வேண்டும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
‘சிரிலிய’ விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருவதற்காக இரு வாரங்கள் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிய விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ விசாரணைக்கு அழைக்கும்பட்சத்தில், தவிர்க்க முடியாத காரணம் எனில் முதல் சந்தர்ப்பத்தில் அவகாசம் கேட்க முடியும். அவ்வாறு அவர் செய்திருக்ககூடும்.
ஷிரந்தி ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி. முதல் பெண்மணியாக இருந்தவர். நாமல் ராஜபக்சவின் தாய். எனவே, சட்டத்தை மதிக்க வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










